குடிநீர் விநியோகத்தை அறிய இணையதள வசதி: திருப்பூர் மாநகராட்சி அறிமுகம்

குடிநீர் விநியோகத்தை அறிய இணையதள வசதி: திருப்பூர் மாநகராட்சி அறிமுகம்
X

கோப்பு படம்

திருப்பூர் மாநகராட்சியில், குடிநீர் விநியோக விவரத்தை இணையதளம் மூலம் அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள், கொரோனா குறித்த விவரம், தடுப்பூசி இடங்கள் உள்ளிட்டவையை முகநூல், டுவிட்டர், இணையதளம் மூலம் புகார் செய்யலாம் என, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை இணையதளம் மூலம் அறியும் புதிய வசதி மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் தற்போது, திருப்பூர் மாநகர பகுதியில் ஜூன் 30, ம் தேதி வரை குடிநீர் விநியோகம் குறித்த விவரத்தை அட்டவணையை மாநகராட்சி இணையதளம், https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/water-supply distribution, என்ற முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!