வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி டோக்கன்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் புதுமை
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சியில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களிலும், வட்டார அளவில் அவிநாசி வட்டாரத்தில் 14 இடங்கள், மூலனூர் வட்டாரத்தில் 4 இடங்கள், பொங்கலூர் வட்டாரத்தில் 6 இடங்கள், மடத்துக்குளம் வட்டாரத்தில் 6 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், வெள்ளகோவில் வட்டாரத்தில் 3 இடங்கள், காங்கேயம் வட்டாரத்தில் 8 இடங்கள், ஊத்துக்குளி வட்டாரத்தில் 5 இடங்கள், திருப்பூர் வட்டாரத்தில் 6 இடங்கள், குண்டடம் வட்டாரத்தில் 6 இடங்கள், குடிமங்கலம் வட்டாரத்தில் 5 இடங்கள், உடுமலை வட்டாரத்தில் 10 இடங்கள், பல்லடம் வட்டாரத்தில் 8 இடத்தில், தாராபுரம் வட்டாரத்தில் 13 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இடத்திற்கு தகுந்தவாறு, 80 தடுப்பூசி முதல் 200 தடுப்பூசிகள் வரை போடப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதால், பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி போடுவதில் குளறுபடி நடப்பதாகவும், டோக்கன் பெறாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொது மக்கள் மறியல் போராட்டம், முற்றுகையில் ஈடுபட்டு வந்தனர்.
இச்சூழலில்தான், இதுபோன்ற சிக்கலை தவிர்க்கும் வகையில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. தடுப்பூசி போடப்படும் இடங்களில், மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதுமையான இந்த நடைமுறையை கொண்டு வரும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu