தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
X

கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தி, திருப்பூர், பல்லடம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.

கொரோனா தடுப்பூசி முகாம் தினமும் நடத்தக்கோரி, திருப்பூர், பல்லடம் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி வருகைக்கு தகுந்தவாறு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவதால், மக்கள் வருகைக்கு ஏற்ற தடுப்பூசி இல்லாமல், பல இடங்களில் பற்றாகுறை நிலவுகிறது.

இந்நிலையில், திருப்பூரில் தினசரி தடுப்பூசி முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு ஊசி போட வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர், பல்லடம் ரோடு வித்யாலயம் ஸ்டாப் அருகில், பொது மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக சரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. அதே நேரத்தில தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கட்டணம் செலுத்தினால் தடுப்பூசி போடப்படுகிறது. இது எவ்வாறு நடக்கிறது. அரசு சார்பில் தினசரி கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, சமாதானம் அடைந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai in future agriculture