திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்
X
திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசிபோடப்படுவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வர துவங்கி உள்ளது. அதேபோல், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தடுப்பூசிதட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி ஒதுக்கீடுக்கு தகுந்தவாறு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் உள்ள 34 இடங்களில், வாக்காளர் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி இன்று (27 ம் தேதி) போடப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!