திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்:    அமைச்சர்கள் ஆய்வு
X
திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை, அமைச்சர்கள் கே.என். நேரு, சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர்கள் கே.என். நேரு, சாமிநாதன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் 24, மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்புப்பணிகள் குறித்து, அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி, கலெக்டர் விஜயகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நேரு கூறியதாவது:

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51, சதவீதத்தில் இருந்து 8, சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதன் மூலம் கொரோனா முற்றிலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இவை ஆறு மாதத்தில் சரி செய்யும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்படும். திருப்பூர் மாவட்டத்தில் 100, குடும்பங்களுக்கு ஒருவர் என்ற வகையில் கொரோனா கண்காணிக்கப்பட்டு வருகிறது. நடப்பு வாரத்தில் மத்திய அரசிடம் இருந்து கொரோனா தடுப்பூசி பெற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!