திருப்பூர் மாநகராட்சியில் 8 வார்டுகளில் நாளை குடிநீர் வினியோகம் துண்டிப்பு

திருப்பூர் மாநகராட்சியில்  8 வார்டுகளில் நாளை குடிநீர் வினியோகம் துண்டிப்பு
X
திருப்பூர் மாநகராட்சியில், குழாய் பராமரிப்பு பணியால், 8 வார்டுகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டு உள்ள அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி , அவிநாசி சாலையில் உள்ள 26 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி பகிர்மானத்தின் குழாய் பாதையில், நீர்க்கசிவு ஏற்பட்டு உள்ளது.

இந்த குழாய் பாதையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை சரி செய்ய, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, இப்பகிர்மானத்தில் குடிநீர் கால அட்டவணைப்படி 24 ம் தேதி ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.

அதனால், இக்குடிநீர் பகிர்மானத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் வார்டுகள் 12,13,23,24,25,26,27(ப) மற்றும் 47 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம், திருத்திய கால அட்டவணைப்படி விநியோகம் செய்யப்படும். பொது மக்கள் குடிநீரினை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்