திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: மடக்கி பிடித்த போலீசார்
பைல் படம்.
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ்குமார். இவர் திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவர் கார் வாங்குவதற்காக 1.25 லட்சம் ரூபாய் பணத்துடன் உடுமலை செல்ல, அனீஷ்குமார் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு வந்து தனியார் பஸ்சில் உட்கார்ந்திருந்தார். அப்போது, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழுந்ததை பார்த்தபோது, பேண்ட் பாக்கெட் பிளாடால் கிழிக்கப்பட்டு இருந்தது. உடனே அவனை பிடிக்க முயற்சி செய்தபோது, தான் வைத்திருந்த கத்தியை காட்டி திருடன் மிரட்டினான். உடனே அனீஷ்குமார் சத்தம் போட்டார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விக்னேஸ்வரன், திருடனை மடக்கி பிடித்தார். இதனையடுத்து, மடக்கி பிடிக்கப்பட்ட திருடனை விசாரித்தபோது, மோகனசுந்தரம் என்ற தாடி சுந்தரம் 32, என்பதும் அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மோகன சுந்தரத்தை, தெற்கு போலீஸார் கைது செய்தனர். திருடனை மடக்கி பிடித்த விக்னேஸ்வரனை, மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையார் ரவி பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu