தென்மேற்கு பருவமழை: திருப்பூர் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

தென்மேற்கு பருவமழை: திருப்பூர் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை
X

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த தென்மேற்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம்.  

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை, நடப்பாண்டு மே 31 ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் நன்றாக உள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!