அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
X

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள்.

திருப்பூரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தாராபுரம், பல்லடம், ஈரோடு, கோவை போன்ற நகரங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரும்பாலான வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியப்படி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரி வெங்கட்ராமன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். 40 வாகனங்களில் ஆய்வு செய்ததில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று ஏர் ஹாரன்கள் வைக்கப்பட்டு இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்