தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பயன்படுத்த முடியாத 25 கிலோ மீன்கள் பறிமுதல்

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில்  பயன்படுத்த முடியாத 25 கிலோ மீன்கள் பறிமுதல்
X

திருப்பூர் தென்னம்பாளயைம் மீன் மார்க்கெட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்படுகிறது.

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் பார்மோலின் கலந்த 5 கிலோ மீன் உள்பட 25 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பல்வேறு வகையான மீன்கள் விற்கப்படுகிறது. இந்த மீன் மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 1 டன் முதல் 2 டன் மீன் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன் கெடாமல் இருக்க மருந்து கலப்பதாக புகார் எழுந்தது. இதனால் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்ய, கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் மீன் வளத்துறையினர் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பார்மோலின் கலந்து இருந்த 5 கிலோ மீன், மற்றும் விற்பனைக்கு தகுதியற்ற 20 கிலோ மீன் என மொத்தம் 25 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும், 5 மீன் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.


Tags

Next Story