/* */

திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் அருகே விபத்தில் குழந்தை பலி; தாய் படுகாயம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில், தாயுடன் சென்ற 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் அருகே  விபத்தில் குழந்தை பலி; தாய் படுகாயம்
X

திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பனியன் கம்பெனியில் தொழிலாளி வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி தீபா. இவர்களின் 4 வயது பெண் குழந்தை தக்‌ஷனா.

திருப்பூர் பூம்புகார் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு, தீபா தனது குழந்தை தக்‌ஷனாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, ரோட்டின் பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது உரசி, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி யது. இதில், தீபாவும் தக்‌ஷனாவும் சாலையில் விழுந்துள்ளனர்.

அப்போது, பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மினி பஸ்சின் பின் சக்கரம், குழந்தை மற்றும் தாயின் மீது ஏறி, சில அடிதூரம் இழுத்து வந்துள்ளது. இந்த விபத்தில்குழந்தை தக்‌ஷனா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் தீபா, பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 11 Sep 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு