திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ. தகவல்
திருப்பூரில் கிராமப்புற பள்ளிகள் பழுது நீக்கம் தொடர்பாக உத்தேச பட்டியல் தயாரிப்பு குறித்து நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதி இல்லாத அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதி அமைக்க, கலெக்டர் வினீத் வழிக்காட்டுதலின்படி, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பள்ளிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை வீடியோக பதிவு செய்துள்ளனர்.
பள்ளிகளின் அடிப்படை வசதிகள் செய்ய தேவையான உத்தேசபட்டியல் தயாரிப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக கிராமப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநி்லைப்பள்ளிகளில் பழுது பார்க்க வேண்டிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 689 பள்ளிகளில் மேற்கூரை பழுது பார்த்து, கருக்கி அமைத்தல் உள்பட பல்வேறு பழுது நீக்க பணிகள் நடைபெறுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu