திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, பெயர் மாற்றம்: 5 நாட்கள் சிறப்பு முகாம்

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, பெயர் மாற்றம்: 5 நாட்கள் சிறப்பு முகாம்
X
திருப்பூர் மாநகராட்சியில் ஆக.13 முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம்

திருப்பூர் மாநகராட்சியில் புதிய சொத்துவரி விதித்தல், பெயர் மாற்றம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ஆக.13 ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை , மண்டலம் 1 ல் வார்டு 2,3,4,7 பகுதிக்கு அவிநாசிகவுண்டம் பாளையம், செட்டிபாளையம் வரி வசூல் மையம், மண்டலம் 2 -இல் வார்டு 16,17,18,19 பகுதிக்கு பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மண்டலம் 3 இல் வார்டு 31,32,33 பகுதிக்கு கருமாரம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மண்டலம் 4 இல் வார்டு 46,47,48 பகுதிக்கு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

ஆக.16 ஆம் தேதி மண்டலம் 1இல் வார்டு 1,5,6 பகுதிக்கு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மண்டலம் 2 இல் வார்டு 20,28,29,30 பகுதிக்கு பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 3 இல் வார்டு 34,35,38,39 பகுதிக்கு நல்லூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மண்டலம் 4, வார்டு 49,46 பகுதிக்கு கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

ஆக.18 ஆம் தேதி மண்டலம் 1ல் வார்டு8,9 பகுதிக்கு குமானந்தபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மண்டலம் 2இல் வார்டு 21,22,23 பகுதிக்கு என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மண்டலம்3 ல் வார்டு 36,37 பகுதிக்கு முத்தனம்பாளையம் நடுநிலைப்பள்ளி, மண்டலம் 4 இல் வார்டு 50,51 க்கு பட்டுக்கோட்டையார் நகர் நடுநிலைப்பள்ளி, வார்டு 59,60 க்கு ஆண்டிபாளையம் நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது.

ஆக.,23 ம் தேதி மண்டலம் 1 இல் வார்டு 10,11,12,13 பகுதிக்கு குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 2 இல் வார்டு 24,25 பகுதிக்கு சின்னசாமி அம்மாள் உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 3 இல் வார்டு 40,41,43 பகுதிக்கு செரங்காடு நடுநிலைப்பள்ளி, மண்டலம் 4 இல் வார்டு 52,53,54 பகுதிக்கு வீரபாண்டி வரி வசூல் மையத்தில் நடக்கிறது.

ஆக.25 ஆம் தேதி மண்டலம் 1 இல் வார்டு 14,15 க்கு வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி, மண்டலம் 2 இல் வார்டு 26,27 பகுதிக்கு நெசவாளர் காலனி உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 3 இல் வார்டு 44,42,45 பகுதிக்கு கேஎஸ்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 4 இல் வார்டு 55,57,58 பகுதிக்கு முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது.


Tags

Next Story
ai problems in healthcare