திருப்பூரில் செப். 29ல் தபால்துறை குறைதீர் கூட்டம்

திருப்பூரில் செப். 29ல்  தபால்துறை குறைதீர் கூட்டம்
X
இந்திய அஞ்சல்த்துறை சார்பில், திருப்பூரில் செப்.29ம் தேதி தபால் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.

திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், செப்.19 ம் தேதி தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தபால் சேவையை பற்றி புகார், தெரிவிக்க விரும்புவோர், தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், 641601 என்ற முகவரிக்கு, கடிதம் மேல், dak adalat case என, குறிப்பிட்டு, வரும் 24 ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கட்டாயம் கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!