/* */

கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால் கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு மனு

HIGHLIGHTS

கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
X

கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீன படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில்,

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறுகிறது. கீழ்பவானி பாசன திட்டத்தின் மூலம் 163 வருவாய் கிராமங்களில் உள்ள ஏரி, குளங்கள், தடுப்பணைகள் பயன்பெறுகிறது. கீழ்பவானி வாய்க்கால் நவீனப்படுத்தப்பட்டதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தண்ணீர் பிரச்னைக்கு தீர்க்க அரசு 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பாசன திட்டத்தில் 34 கசிவு நீர் குட்டைகள் மூலம் 18 ஆயிரம் நிலம் பாசன வசதி பெறுவதும் தடைப்படும்.

மேலும், திருப்பூர் சாய கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்து உள்ளது. கீழ்பவானி பாசன தண்ணீர் நொய்யல் ஆற்றின் மாசுப்பட்ட தண்ணீர் 40 கிலோ மீட்டருக்கு, தள்ளிச் சென்று விடுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் கீழ்பவானி திட்டத்தை மக்கள் கருத்து கேட்டு செயல்படுத்துவதாக முதலவர் ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும் எங்களுக்கு கிடைத்த தகவல்படி, 3 தொகுப்பு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில், 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடிதளத்தில் கான்கீரிட், 58 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு கரைகளில் கான்கிரீட் சிலாப் அமைப்பது, கால்வாய் பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலில் 103 கிலோ மீட்டர் தூரம் கான்கீரிட் அமைப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 May 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  3. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  4. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  6. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  8. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  10. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...