திருப்பூர் கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கேரளா சமாஜம் சார்பில் அத்தப்பூ கோலாமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
திருமால் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியை அடக்கினார். பின்னர் மக்கள் அனைவரும் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என மன்னன் வேண்டிய வரம் பெற்றார். மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண ஆண்டுதோறும் வரும் தினத்தை ஓணம் பண்டிகையாக கேரளா மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருஓணம் வரைக்கும் பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் அன்பளிப்புக்கள், உணவு பரிமாற்றங்கள் ஆகியவை சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு போட்டிகள் ஏதுமின்றி ஓணம் பண்டிகை அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை வெகு விமரிைசயாக கொண்டாடப்பட்டது. இதில், பெண்கள் அத்தப்பூ கோலாமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கேரள மொழி பேசும் மக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu