வெளிநாடுகளில் செவிலியர்கள் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளிநாடுகளில் செவிலியர்கள் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
X
வெளிநாடுகளில் செவிலியர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டு உள்ள அறிக்கை:

திருப்பூர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் செயல்படும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்களை வேலையில் அமர்த்தி வருகிறது.

ஓம்எம்சிஎல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 500 நர்சிங் மாணவர்களுக்கு தொழில் சார் ஆங்கிலத்தேர்வு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கான தொடக்க சம்பளம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் 24 லட்சம் வரை பெற வாய்ப்பு உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும், பதிவு செய்யவும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக எண் 04212999152 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future