திருப்பூரில் 17 கடைகளுக்கு நோட்டீஸ்: 5 கடைகளில் 36 கிலோ பலகாரம் பறிமுதல்
திருப்பூரில் உணவு கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்.
திருப்பூர் மாநகரில் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். இதனால் காரணமாக தின்பண்ட கடைகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகம் காணப்படுகிறது. கடைகளில் சுகாதாரமற்ற வகையில் உணவு வகைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து திருப்பூர் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் மாநகரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விதிமுறை பின்பற்றாத 17 கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் 5 கடைகளில் இருந்து சரியாக மூடி வைக்காமல், சுகாதார நிலையில் 36 கிலோ பலகாரமும், 10 கிலோ இஞ்சி பூண்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பாலீத்தின் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதமும், பாலீத்தன் பை பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu