திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை

திருப்பூர் மாநகராட்சியில் இன்று  தடுப்பூசி முகாம் இல்லை
X
திருப்பூர் மாநகராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவதால், தடுப்பூசி பற்றாகுறை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு சென்டரிலும் தினசரி டோக்கன் விநியோகம் செய்து, அதற்கு ஏற்றவாறு தடுப்பூசி போடப்படுகிறது.

சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி தீர்ந்துவிட்டதால், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in agriculture india