திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது
X
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்பட்ட டிஎஸ்கே, 15 வேலம்பாளையம், அண்ணா நெசவாளர் காலனி, மேட்டுப்பாளையம், நெசவாளர் காலனி, நெருப்பெரிச்சல் உள்ளிட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், 5 ம் தேதி வரை, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், வார்டுக்கு தலா 200 தடுப்பூசி வீதம் செலுத்தப்பட்டது. எனினும் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படமாட்டாது என, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!