திருப்பூர் மாநகராட்சியில் இன்றும் தடுப்பூசி முகாம் கிடையாது

திருப்பூர் மாநகராட்சியில் இன்றும் தடுப்பூசி முகாம் கிடையாது
X
தடுப்பூசி வராததால், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில், தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று தடுப்பூசி போடப்பட மாட்டாது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 17 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

எனினும், கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. அதேபோல், இன்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட மாட்டாது என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare