தமிழகத்தில் திருப்பூர் உள்பட மேலும் 4 இடங்களில் நீட்தேர்வு மையம்

தமிழகத்தில் திருப்பூர் உள்பட மேலும்   4 இடங்களில் நீட்தேர்வு மையம்
X
தமிழகத்தில், திருப்பூர் உள்பட மேலும் 4 இடங்களில் நீட்தேர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பாண்டு நீட்தேர்வு இருக்காது என மாணவர்கள் கருதி வந்தனர். இந்த நிலையில், செப்டம்பர் 12 ம் தேதி நீட்தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு இருந்த போதிலும், மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராகுங்கள் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil