திருப்பூரில் 672 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்

திருப்பூரில் 672 மையங்களில் இன்று  தடுப்பூசி முகாம்
X
திருப்பூர் மாவட்டத்தில் 672 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று, (19 ம் தேதி) 672 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இது குறித்து, திருப்பூர் கலெக்டர் வினீத் தெரிவித்து உள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், செப்டம்பர் 19 ம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று, மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவில் தடுப்பூசி வைக்கப்பட்டு, முகாம் நடக்கிறது.

இடையூறு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் வட்டாரம் வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.முகாமில் 76 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. முகாம்களின் கூடுதல் தடுப்பூசி தேவை ஏற்பட்டால் மருத்துவ துறையினரையும், வருவாய் துறையினரையும் தொடர்பு கொண்டு தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்று வழங்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். இதுவரை, 13 லட்சத்து 81 ஆயிரத்து 390 பேர், முதல் தவணையும், 2 லட்சத்து 62 ஆயிரத்து 252 பேர், இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 6 லட்சத்து 95 ஆயிரத்து 705 பேருக்கு முதல் தவணையும், உரிய காலத்துக்குள் 2 ம் தவணையும் போட வேண்டிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 866 பேருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

கடந்த 12 ம் தேதி நடந்த முகாமில், 1 லட்சத்து 23 ஆயிரத்து 163 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நாளை நடைபெறும் முகாமில் 76 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!