தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்

தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த   கலெக்டர்
X

பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்.

தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை கலெக்டர் வினீத் இன்று துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சார வாகன துவக்க விழா நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. பிரச்சார வாகனத்தை கலெக்டர் வினீத் துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். இதில், கிராமப்புற தூய்மை குறித்தும், தனிநபர் இல்ல கழிப்பறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த வாகனம் திருப்பூரின் முக்கிய வீதிகள் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!