திருப்பூரில் புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்பு: தொழில் துறையினர் வரவேற்பு
பைல் படம்.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு வணிக வரி நிர்வாக கோட்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய வணிக வரி நிர்வாக கோட்டம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் வணிகர்கள் உள்ளடக்கிய மதிப்பீட்டு அளவைகள் பயன்பெறலாம். திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கரூர் மாவட்டத்துக்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அவிநாசியை சேர்ந்தவர்கள் கோவைக்கு செல்ல வேண்டி இருந்தது. தற்போது இந்த அறிவிப்பால் தொழில் துறையினர் மற்ற மாவட்டங்களுக்கு செல்வது தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu