திருப்பூரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; போலீசார் விசாரணை

Theni News Today | Robbery Case
X
திருப்பூரில் வீடு புகுந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ஜெயராஜ்,38. பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில் வழி அருகே புதுப்பிள்ளையார் நகரில் வசித்து வருகிறார்.

கடந்த அக்.,28 ம் தேதி ஜெயராஜின் தாயார் இறந்ததற்கு காரியம் செய்ய குடும்பத்துடன் ஆண்டிப்பட்டிக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்து இருந்த 13 ஆயிரம் பணம் மற்றும் மூக்குத்தி, கம்மல், சங்கிலி என மூன்றேகால் பவுன் நகை திருடப்பட்டது.

இது குறித்து ஜெயராஜ், நல்லூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!