திருப்பூர் மாநகராட்சியில் நாளை கூட்டு துப்புரவுப்பணி நடைபெறுகிறது

திருப்பூர் மாநகராட்சியில் நாளை  கூட்டு துப்புரவுப்பணி நடைபெறுகிறது
X
திருப்பூர் மாநகராட்சியில் நாளை கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளப்படும் என்று, மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில், நாளை கூட்டு துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மண்டலம் 1 ல் அவிநாசி மெயின்ரோடு, ஜீவா வீதி, இந்திரா நகர், கவிதா லட்சுமி நகர், கொங்கணகிரி, டீச்சர்ஸ் காலனி, மருத்தாசலபுரம் மெயின்ரோடு, சத்யா நகர், வஉசி நகர், மல்லிகை நகர், திருவள்ளுவர் நகர், தண்ணீர்பந்தல்கிழக்கு; மண்டலம் 2 ல், நல்லப்பா நகர் மெயின் வீதி, செல்வவிநாயகர் வீதி, ப.நகர், ஏடி காலனி, ஏவிஎஸ் நவீன் கார்டன், லட்சுமி நகர், ராதா நகர், கட்டபொம்மன் நகர் விரிவு, அருள்ஜோதி நகர், ராமு காலனி, ராம் நகர் 1,2, பிஎன் மெயின் ரோடு, விஆர்பி நகர், எம்எஸ் நகர், ஜெவி கம்பெனி வீதி, வள்ளலார் வீதி, தரிகுடோன் வீதி, பாப்பாநகர் 1 முதல் 3 ஆகிய இடங்களில் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல், மண்டலம் 3 ல், கோர்ட் வீதி, மூகாம்பிகை நகர் செந்தாம்பாளையம், ஏடி காலனி மாங்கரை அம்மன் நகர் விஜிவி கார்டன் 10,20,21 வீதிகள், கடுகாரர் தோட்டம், டிஎம்சி காலி, தென்னம்பாளையம் விரிவு; அத்துடன் மண்டலம் 4, குமரப்பபுரம் 1,2 வீதி, முத்துசாமி வீதி, 1 முதல் 6 குறுக்கு வீதிகள், அம்மா உணவகம், மணி காம்பவுண்ட், வெள்ளியங்காடு 1 மற்றும் 3 வீதி, வினோபா நகர் பகுதி முழுவதும் 4,5 வீதிகள், சூரிய கிருஷ்ணாநகர், கருப்பராயன் கோவில் வீதி, முத்து நகர் 1 வது வீதி, கண்ணன் காட்டேஜ் ஆகிய இடங்களில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கூட்டு துப்புரவுப்பணி நடக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!