திருப்பூரில் கொரோனா தடுப்பூசி விவகாரம் மருந்தாளுனர் சஸ்பெண்ட்
திருப்பூர் மாநகராட்சியில் தடுப்பூசி இல்லாமல் பொது மக்கள் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டு இருக்கின்றனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினசரி 300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள துவக்கத்தில் தயக்கம் காட்டிய பொது மக்கள், தற்போது, மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
மக்கள் ஆர்வமாக வரும் நேரத்தில், கடந்த மூன்று நாட்களாக நகரின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையும் அதிகரித்துள்ளது. எதாவது ஒரு இடத்தில் தடுப்பூசி இருக்குமா என பொது மக்கள் பலர் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், ஜூன் 5-ம் தேதி மாவட்ட சுகாதாரத்துறையின் அலுவலகத்துக்கு 2000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றடைய வேண்டிய, 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், அரசு மருத்துவர்களுக்கே தெரியாமல் தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயனர் ஐடியும், பாஸ்வேர்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி மீது சுகாதார துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மருந்தாளுனர பாலமுருகன், சஸ்பெண்ட் செய்து, பொதுமருத்துவம், நோய்தொற்று தடுப்பு மருத்துவமனை உத்தரவிட்டு உள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை கோவின் இணையதளத்தில் இருந்து தற்காலிமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu