திருப்பூரில் 4 மாணவிகளுக்கு கொரோனா: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

வீரபாண்டி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.

திருப்பூரில் மேலும் 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டதில் கொரோனா தொற்று குறைந்த பிறகு 9 வது முதல் ‌பிளஸ் 2 வகுப்புகள் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பிற்கு பின் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 100 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையில் 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!