திருப்பூரில் 771 பேருக்கு கெரோனா: 7 பேர் பலி
திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகமாக பரவி வருதை தொடர்ந்து கலெக்டர் ஆபீஸில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பற்றிய சந்தேகங்கள் மற்றும் விவரங்களை 1077 அல்லது 04212971199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில், சுகாதார துறையினர் இன்று வெளியிட்ட பட்டியலில்,
திருப்பூர் மாவட்டத்தில் 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளதாகவும், 7 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தாராபுரம் பகுதியில் 30 க்கும் மேற்பட்டவர்கள்,
உடுமலை பகுதியில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 34 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 ஆயிரத்து 210 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
5179 பேர் சிகிச்சையில் உள்ளனர். 272 பேர் இதுவரை இறந்து உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பல மருத்துவனைமயில் சிகிச்சைக்கு இடவசதி இல்லாமல் பொது மக்கள் அலைந்துக்கொண்டிருக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu