திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
X

திருப்பூரில் மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள்.

திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடந்தது.

திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வை பொது மக்கள் குறித்த விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான உதயம் மராத்தான் போட்டி நடந்தது.

நல்லூர் பகுதியில் இருந்து இளைஞர்களுக்காக தொடக்கப்பட்ட மராத்தான் போட்டி 5 கிலோ மீட்டர் தூரமும், முத்தனம்பாளையம் பகுதியில் பெண்களுக்காக தொடக்கப்பட்ட மராத்தான் போட்டி மூன்று கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடந்தது. போட்டியில் முதல் நான்கு இடங்கள் பிடித்தவர்களுக்கு ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!