பாறைக்குழியில் மீன் பிடிக்கச்சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

பாறைக்குழியில் மீன் பிடிக்கச்சென்ற சிறுவர்கள்  தண்ணீரில் மூழ்கி பலி
X

தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவர்கள்.

திருப்பூரில் பாறைக்குழியில் மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர்களுக்கு சத்யா, குமரன் என மகன்கள். இவர்கள் நேற்று , அப்பகுதியில் பாறைக்குழியில் மீன் பிடிக்க சைக்கிளில் சென்றனர். நேற்று இரவு வரை அவர்கள் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் தேடி பார்த்தபோது, பாறைக்குழி அருகே சைக்கிள், சிறுவர்கள் அணிந்திருந்த உடை இருந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். மீன் தூண்டியில் சிக்கி, அதை எடுக்க சென்றபோது, தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!