திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
X

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயற்சித்த தம்பதியினர்.

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் பருப்பு வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு நீதி முகாம் நடந்தது. முகாமில் மனு அளிக்க, தாராபுரம் அம்மாபட்டி பகுதியை சேர்ந்த தேங்காய் பருப்பு வியாபாரி கோவிந்தாமி, தனது மனைவியுடன் வந்தார். திடீரென, தனது சொத்தை மீட்டு தர வேண்டும் என இருவரும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். தீக்குளிக்க முயற்சித்தவர்கள் கூறுகையில், தேங்காய் பருப்பு வியாபாரம் செய்கிறேன்.

வங்கியில் சென்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால், தன்னுடன் தொழில் செய்யும் முகமது என்பவரிடம் பணம் தொடர்பாக அணுகினேன். தனது சொத்த மாற்றி கொடுத்தால், கடன் வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பி தனது சொத்தை அவர் பெயருக்கு மாற்றி கொடுத்தேன். ஆனால், அவர் சொத்தை விற்று விட்டு, குறைந்த அளவு பணம் தருவதாக கூறுகினறார். எனதுசொத்தை மீட்டு தர வேண்டும் என்றனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!