மாற்றுத்திறனாளிகளில் குடியிருப்பு பயனாளிகள் கண்டறிய சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளில் குடியிருப்பு  பயனாளிகள் கண்டறிய சிறப்பு முகாம்
X

திருப்பூர் கலெக்டர் வினீத்

திருப்பூர் மாவட்டத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பாக பயனாளிகளை கண்டறிய சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

திருப்பூர் கலெக்டர் வினீத் தெரிவித்து உள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம், திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, உடுமலைபேட்டை மற்றும் பல்லடம் நகராட்சி பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.

குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோரில் தகுதி உள்ள பயனாளிகள் கண்டறியும் சிறப்பு முகாம் ஆக.,19 மற்றும் 26 ஆகிய நாட்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் உரிய சான்றிதழ்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai problems in healthcare