திருப்பூர் மாவட்டத்தில் 69 இடங்களில் இன்று கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர் மாவட்டத்தில் 69 இடங்களில் இன்று கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
X
திருப்பூர் மாவட்டத்தில் 69 இடங்களில் இன்று கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 69 இடங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று (17 ம் தேதி) போடப்படுகிறது என சுகாதார துறை அறிவித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனை, திருப்பூர் மாநகராட்சியில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்கள், காங்கேயம், மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், உடுமலை, பொங்கலூர், குண்டடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது திருப்பூர் மாவட்டத்திற்கு 20, ஆயிரத்து 500, கோவிஷீல்டு தடுப்பூசியும், 2240, கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இன்று கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவங்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்கள உள்பட 69, இடங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!