திருப்பூரில் 3 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும்: கலெக்டர் எச்சரிக்கை

திருப்பூரில் 3 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும்:  கலெக்டர் எச்சரிக்கை
X

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்.

3 நாட்கள் இடியுடன் கூடிய மழை அறிவிக்கப்பட்டு உள்ளதால் திருப்பூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை குறித்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இருந்து வரப்பெற்று உள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் கலெக்டர் வினீத் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஆக.,28 (நாளை) இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும், ஆக.,29,30 ம் தேதியில் கனமழை முதல் மிக அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகரில் ஜம்மனைப்பள்ளம், சங்கிலிப்பள்ளம் ஆகிய பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு, நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும், முன் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழையின் அளவு அதிகமாக இருக்கும் காலங்களில் மழைநீர் வீட்டினுள் புகுந்திடும் அபாயம் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள அரசு முகாம் கட்டிடங்களில் தங்கி கொள்வதுடன் அவ்வாறு வெளியேறும் போது வீட்டிலுள்ள கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இடியுடன் கூடிய கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ள ஆக.,28 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை பொது மக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். இடி பாதிப்பிற்கு அதிக அளவில் உள்ளாகும் உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்களின் அருகில் நிற்க வேண்டாம், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!