2 ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவு

2 ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வரை மாவட்டம் முழுவதும் 89ஆயிரத்து363, பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 87ஆயிரத்து567, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 99 ஆயிரத்து 555 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ,7 லட்சத்து 66 ஆயிரத்து 863 பேர் முதல் தவணையும், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 692 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 179 பேர் ஆண்கள், 4 லட்சத்து 29 ஆயிரத்து 210 பேர் பெண்கள். கோவிஷீல்டு தடுப்பூசியை 7 லட்சத்து 86 ஆயிரத்து 143 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 458 பேரும் செலுத்தியுள்ளனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 72 ஆயிரத்து 576 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2 லட்சத்து 70 ஆயிரத்து 57 தடுப்பூசியும், 60 வயதை கடந்தோருக்கு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 922 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்