திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை முதல் தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  நாளை முதல் தடுப்பூசி முகாம்
X
திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நாளை முதல் 29ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள், நாளை முதல் 29 ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

தினசரி காலை 10.30 முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 19ம் தேதி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 20ம் தேதி, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22ம் தேதி, காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 23ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் 26ம் தேதி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27ம் தேதி, மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 28ம் தேதி, உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 29ம் தேதியும் நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முகாம் நடக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture