திருப்பூர் குமரன் ரோட்டரி கிளப் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

திருப்பூர் குமரன் ரோட்டரி கிளப் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
X

திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கம் சார்பில்,  மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

திருப்பூரில் உள்ள, குமரன் ரோட்டரி கிளப் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் ரோட்டரி கிளப் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், குமரன் ரோட்டரி நிர்வாகிகள் ஜோதிஸ்வரன், செந்தில்குமார், விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் சக்ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு ஏற்பாடு செய்தது. மேலும் ரோட்டரி சங்கத்திற்கு திருப்பூர் சக்ஷம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!