பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மாட்டு, வண்டியில் வந்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு  மாட்டு, வண்டியில் வந்து ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மாட்டு, வண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் சிடிசி கார்னரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாட்டு வண்டியில் காஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிள் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நசீர்தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அபசாலி, மாநிலதலைமை கழக பேச்சாளர ரபீக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதேபோல், சிஐடியு., சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவைகள் சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ், வங்கி கடன் தவணைகளுக்கு கால நீடிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சங்க தலைவர் விஸ்வநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare