போலீஸ் வாகனம் கடத்தல் தொடர்பாக டிரைவர் சஸ்பெண்ட்

போலீஸ் வாகனம் கடத்தல் தொடர்பாக டிரைவர் சஸ்பெண்ட்
X
திருப்பூர் போலீஸ் வாகனம் கடத்தப்பட்ட விவகாரத்தில் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பூரில் கடந்த ஏப்.,7 ம் தேதி மாநகராட்சி ஆபீஸ் முன் நிறுத்தப்பட்டிருந்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டரின் போலீஸ் வாகனத்தை திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்த விஜய்,31 என்பவர் மது போதையில் கடத்திச் சென்றார்.

ஊத்துக்குளி ரோடு வெள்ளியம்பாளையம் தாமரை கோவில் அருகே எதிரே வந்த லாரி மீது மோதி போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த விஜய், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் ஜீப் டிரைவர் ஆயுதப்படையை சேர்ந்த ராஜகுரு,34, பணியில் அலட்சியமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!