திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
X

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊடரங்கு அமல்படுத்தி இருந்தாலும், திருப்பூரில் வெளியில் சுற்றி வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

இதனால் திருப்பூர் போலீஸார் மற்றும் சுகாதார துறை சார்பில் திருப்பூரில் பழைய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட முக்கிய ரோடு பகுதியில் தடுப்பு அமைத்து, இ–பாஸ் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் முழு விவரங்களையும் சேகரித்த பிறகு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் வெளியில் தேவையில்லாமல் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என போலீஸார் கருதுகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil