அதிமுகவை அழிக்கும் பணி தீவிரம்: பாஜக தேசிய செயலாளர் எச்சரிக்கை

அதிமுகவை அழிக்கும் பணி தீவிரம்: பாஜக தேசிய செயலாளர் எச்சரிக்கை
X

திருப்பூர் பாஜக. அலுவலகத்தில் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசினார். அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.

ரெய்டு பெயரில் அதிமுக.,வை அழிக்க திமுக திட்டம் திருப்பூரில் பாஜக., தேசிய செயலாளர் இப்ராஹிம் பேட்டி.

திருப்பூரில் பாஜக.,தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கூறியதாவது: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு ஆக இருக்கட்டும், இனிமேல் ரெய்டு நடத்த முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் எடுத்து வைத்திருக்க கூடியதாக இருக்கட்டும், முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

அதிமுக தமிழகத்தில் இனி இருக்க கூடாது என்பதற்காக, அக்கட்சியை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர். இதுதான் வெளிப்படையான உண்மை. திமுக பெயர் வரக்கூடாது என்பதற்காக, யாரோ புகார் கொடுத்தாக தெரிவிக்கின்றனர். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

வருகிற தேர்தலில் இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்யும்போது, கண்ணியமாக பேச தெரியாத அமைச்சராக இருக்கிறார். நிதி நிலை வந்த பிறகு, அதில் என்னென்ன குறைபாடு உள்ளது என்பதை தெரிவிக்க பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றார்.

நிகழ்ச்சில் நிர்வாகிகள் செந்தில்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் நரேன்பாபு, மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai problems in healthcare