திருப்பூரில் இந்து முன்னணியினர் மடிபிச்சை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் இந்து முன்னணியினர் மடிபிச்சை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் தீசட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூரில் இந்து முன்னணியினர் மடிபிச்சை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாயை ஒட்டி, கொரோனா காரணமாக ஊர்வலம் நடத்த தமிழக அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் தீச்சட்டி ஏந்தியும், மடிபிச்சை எடுத்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
healthcare ai projects