குட்கா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

குட்கா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X
திருப்பூரில் குட்கா விற்பனை செய்தவர், இதே போன்று தொடர் குற்றத்தில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் 27, ம் தேதி திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில் திருப்பூர் போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது, கோவை செல்வபுரத்தை சேர்ந்த ரியாசுதீன், என்பவர் வைத்து இருந்த 127, கிலோ குட்கா பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டார். தொடர் குற்ற நிகழ்வில் அவர் ஈடுபட்டதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸார் பரிந்துரை செய்தனர்.

அதன்படி குண்டர் சட்டத்தின் கீழ் செய்து செய்ய மாநகர கமிஷனர் வனிதா, உத்தரவிட்டார். கோவை சிறையில் உள்ள ரியாசுதீனுக்கு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் இதுவரை 37, பேர் குண்டர் சட்டத்தின்கீழ் செய்து செய்யப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!