நுண் உரம் தயாரிக்கும் மையம்: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

நுண் உரம் தயாரிக்கும் மையம்: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
X
திருப்பூர், 4 வது மண்டலத்தில் நுண் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும், 60 வார்டு அமைந்துள்ளன. மாநகரில் குவியும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கப்படுகிறது. உணவகங்கள், வீடுகளில் உள்ள உணவுக்கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பையை சேகரித்து அவற்றில் இருந்து நுண் உரம் தயாரிக்கப்படுகிறது.

அத்துடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 4 வது மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பூலுவப்பட்டியில் கொட்டப்பட்டு, அங்கு நுண் உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, 10 க்கும் மேற்பட்ட தொட்டிகள் கட்டப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், உரம் தயாரிக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நுண் உரம் தயாரிப்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்