திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு கொரோனா டெஸ்ட்

திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு கொரோனா டெஸ்ட்
X

திருப்பூர் வந்த அரசு பஸ்சில், எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கிய கண்டக்டருக்கு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

திருப்பூசில், எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, தற்போது பொது போக்குவரத்து துவங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூருக்கு, 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்துள்ளது. அந்த பஸ்சின் கண்டக்டர், பயணிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கியுள்ளார். எச்சில் தொட்டு டிக்கெட் வழங்க வேண்டாம் என பயணிகள் கேட்டு கொண்டபோதும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆவேசமடைந்த பயணிகள், திருப்பூர் சுகாதாரத்துறைக்கு, பஸ் நம்பருடன் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், திருப்பூர் சுகாதாரத்துறையினர், போக்குவரத்து போலீஸார் இணைந்து, தென்னம்பாளையத்தில் பஸ் வந்தபோது, வளைத்து நிறுத்தினர்; கண்டக்டரை கீழே இறங்கச் சொல்லி, அவருக்கு பஸ் ஸ்டாப்பில் வைத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன், இனிமேல், எச்சில் தொட்டு டிக்கெட் வழங்க கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இதற்கிடையில், நடத்துனர்கள் பயண சீட்டு வழங்கும்போது எச்சில் தொட்ட வழங்க கூடாது. ஸ்பான்ச்சில் தண்ணீர் வைத்து பயன்படுத்தி பயண சீட்டு வழங்குமாறு, போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!