திருப்பூர் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்றது.

தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொதுசெயலாளர் மேற்கு, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில முதன்மை பொது செயலாளர்(ம) மாஸ்டர் குமரேசன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கொரோனா விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்ட பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர் வழங்கி பேசியதாவது: பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு அரசு வழிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களின் அலுவலகங்கள் வங்கிகள், கனிணி மையங்கள், நிதி நிறுவனங்கள், தொலை தொடர்பு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், மளிகைக்கடைகள், காய்கறி அங்காடிகள், அரிசி மண்டிகள், கோழி ஆடு போன்ற இறைச்சி கடைகள் மீன்கடைகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கல்லுரிகள், பள்ளிகள் விடுதி, அங்கன்வாடிமையங்கள் மேற்க்கண்டுள்ள இடங்களில் அரசு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கையுறை, முககவசம் மற்றும் காய்கனி கழிவுகள் சேகரிப்பதற்கு 200 பாக்கெட்கள் வழங்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் ரவி, மாநகர் நல அலுவலர் பிரதீப், அலுவலர்கள் கிருஷ்ணமார், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


:


Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!