திருப்பூரில் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் கேஸ் விலை உயர்வை கண்டித்து  சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்
X

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாடைக்கட்டி எடுத்து வரப்பட்ட சிலிண்டர்.

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 8 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.165 அதிகரித்து உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள், சிலிண்டர் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சிலிண்டரை பாடைக்கட்டி எடுத்து வந்து விலை உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!