திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்

திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்
X

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் நடந்தது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் திருப்பூரில் நடந்தது. மண்டலத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். கொங்கு நகர் மண்டல் பொதுச்செயலாளர் முனீஸ்வரர் பாண்டியராஜன், அமைப்புசாரா மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ரத்தினசாமி, கொங்கு நகர் மண்டல் துணைத் தலைவர் செல்வராஜ் ,கொங்கு நகர் மண்டல கல்விப்பிரிவு மண்டலத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!